ஆவியே தூய ஆவியே
இறங்கி வாருமே – 2

உம் பிரசன்னம் என்னைத் தேற்றும்
உம் வசனம் என்னை ஆற்றும் – 2

1.பெந்தெகோஸ்தே நாளினில்
பெருமழையாய் இறங்கினீர்
இன்று எங்கள் மீதினில்
பெருமழையாய் இறங்குமே

2.யாரை நான் அனுப்புவேன்
என்று ஏசாயாவை கேட்டீரே
அடியேன் இருக்கிறேன்
என்னை தயவாய் ஏற்றுக்கொள்ளும்

3.கடைசி நாட்களில்
கர்த்தரைத் தொழுதிட
சுட்டெரிப்பின் ஆவியால்
என் சுபாவங்கள் சுட்டெரியும்

சேரும் பாக்கியம் கிடைத்ததே
நான் நடக்கும் வழியைக் காட்டி
உம் ஆலோசனை தாருமே
நன்றி நன்றி ராஜா – 4

1.குயவன் கையில் களிமண்போல்
உமது கரத்தில் இருக்கிறேன்
என்னை வனைந்து உமது கரத்தில்
என்னை வரைந்து வைத்திடுமே

2.தூய இதயம் தாரும்
உம் நிலைவர ஆவியை ஊற்றும்
உம் சமுகத்தை விட்டென்னைத் தள்ளாமல்
தூய ஆவியால் நிரப்பிடும்

உம் தயவையும் பாராட்டினீர்
உம் பராமரிப்பு என் ஆவியைக் காத்து வந்தது
அல்லேலூயா – 8

1.உம் கிருபையினாலே இறங்கினீர்
என் மீறுதல்கள் நீங்க கழுவினீர்
நான் துர்குணத்தில் உருவாகினேன்
என் தாயின் கருவில் என்னைத் தெரிந்தீரே
சுத்த இருதயத்தை என்னில் சிரு~;டித்தீரே
உந்தன் ஆவியை உள்ளத்தில் புதுப்பித்தீரே
உம் சமூகத்தை விட்டு என்னைத் தள்ளாமலே

உம் பரிசுத்த ஆவியால் நிரப்பினீரே – அல்லேலூயா
2.உள்ளத்தில் உண்மையை வரும்பினீர்
ஞானத்தை எனக்குத் தந்தீரே
ஈசோப்பினால் என்னைக் கழுவினீர்
உறைந்த மழையைப்போல் வெண்மையானேன்;
என் பாவங்களை பாராமலே
என்; அக்கிரமங்களையெல்லாம் நீக்கினீரே
சிலுவையில் சிந்திய இரத்தத்தாலே
உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே – அல்லேலூயா

கைவிடாத தெய்வம் கரம் பிடித்த தெய்வம்
காண்கின்ற தெய்வம் நீரே
தாங்கி நடத்தும் தெய்வம் தாழ்வில் நினைத்த தெய்வம்
தப்புவிக்கும் தெய்வம் நீரே

1.யோசனையில் பெரியவரே
செயல்களில் வல்லவரே
உம்மாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை
நீர் யோசனையில் பெரியவர்
செயல்களிலே வல்லவர்
கூடாதது ஒன்றுமில்லையே – கைவிடாத

2.அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
காயங்களை கட்டும் கல்வாரி நாயகனே
நீர் அதிசயமானவர்
ஆலோசனை கர்த்தர்
கல்வாரி நாயகனே- கைவிடாத

3.பசும்புல் மேய்ச்சலிலே
நடத்திச் செல்பவரே
அமர்ந்த தண்ணீரண்டை என் தாகம் தீர்ப்பவரே
பசும்புல் மேய்ச்சலில்
அமர்ந்த தண்ணீரண்டையில்
தாகம் தீர்ப்பவரே- கைவிடாத

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
கைதட்டி பாடு, போற்றி பாடு கெம்பீரமாய் பாடு
புகழ்ந்து பாடு, மகிழ்ந்து பாடு, ஆர்ப்பரித்து என்றும் பாடு – 2

1.உன்னை பெயர் சொல்லி அழைத்த தேவன் அவர்
உன்னை ஒருநாளும் கைவிடவே மாட்டார் – 2

2.சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலும்
கர்த்தரை தேடுவோர்க்கு நன்மைகள் குறையாது -2

3.நான் கூப்பிட்ட நாளினிலே மறுமொழி கொடுத்தீரே
ஆத்துமாவில் பெலனை தந்து என்னை தைரியப்படுத்தினீரே -2

4.துன்பத்தின் நடுவினிலே நான் நடந்திட நேர்ந்தாலும்
உமது வலது கரம் என்னை இரட்சிக்கும் -2

5.நான் பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன்
தேவனை நம்பியிருக்கிறேன் மனு~னை நம்பமாட்டேன் -2

கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும்
வர்த்திக்கப்பண்ணிடுவார்;
நீ கலங்காதே நீ திகையாதே
உன் தேவன் உன்னோடு இருக்கிறார்

1.ஆபிரகாமை பெயர் சொல்லி அழைத்தேனே
வாக்குத்தத்தம் நிறைவேற்றினேனே
இன்று உன் பெயர் சொல்லி நான் அழைக்கின்றேன்
வாக்குத்தத்தம் நிறைவேற்றிடுவேன்

2.ஆசீர்வதித்தாலொழிய போகவிடேன்
என்று சொன்ன யாக்கோபைப் போல் இருந்தால்
வெறுமையாய் வந்த உங்களையும்
நிறைவாக்கி இரட்டிப்பாய் ஆசீர்வதிப்பார்

3.யோசேப்பை போல் உனக்கு சோதனையோ
சேர்ந்திடாமல் நீ தப்பித்திடு
பரிசுத்தத்திற்காய் கெஞ்சிடு
பரிசுத்த தேவன் பரிசளிப்பார்

பரிசுத்த ஆவியே உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆராதனை செய்கிறோம் உம்மை – 2

1.துணையாளரே அன்பின் ஆவியே
ஆராதனை செய்கிறோம்- 4

2.தேற்றும் ஆவியே கிருபையின் ஆவியே
ஆராதனை செய்கிறோம் – 4

3.ஞானத்தின் ஆவியே பெலத்தின் ஆவியே
ஆராதனை செய்கிறோம் – 4

4.சத்திய ஆவியே மகிமையின் ஆவியே
ஆராதனை செய்கிறோம் – 4

புது வாழ்க்கை பிறந்தது
இயேசுவின் நாமத்தினால்
புது வருடம் பிறந்தது
கர்த்தரின் கிருபையினால்

1.பாவியாய் வாழ்ந்த என்னைத் தேடிவந்தீ;ர்
உம் ஜீவன் எனக்குத் தந்தீர் – 2
என்னையும் கவர்ந்திட்ட நேசரே நீர்
அழகில் சிறந்தவரே – 2

2.இன்று கண்ட எகிப்தியனை
இனிமேல் காண்பதில்லை -2
மோசேயோடு இருந்ததுபோல
உன்னோடும் இருந்திடுவேன் – 2

3.வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
என்னையும் சேர்த்துக் கொண்டார் – 2
பாவத்தை போக்கி சாபத்தை நீக்கி
புது வாழ்க்கை எனக்குத் தந்தார் – 2

4.எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேனையா-2
நோக்கிப் பார்த்ததால் பிழைத்துக் கொண்டேன்
பின்வாங்க மாட்டேனையா- உம்மை – 2

சிறுமைப்பட்ட தேசத்தில்
தேவன் என்னைப் பலுகப்பண்ணினார்
நான் நிற்பதும் உம் கிருபையல்லவா
நிர்மூலமாகாததும் கிருபையல்லவா

1.மனுஷரை என் தலையின் மேல் ஏறச்செய்தீர்
தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தேன்
செழிப்பான இடத்தில் கொண்டு வந்தீர்
வாக்குத்தத்தம் நிறைவேற்றினீர்—- நான் நிற்பதும்

2.செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரத்தைப் போலானேன்
என் தகப்பன் வீட்டின் வருத்தங்களை மறக்கச் செய்தீர்
சாட்சியாக வாழவைத்தீர்—- நான் நிற்பதும்

3.நான் கருவில் உருவான நாள் முதலே
உம்மால் ஆதரிக்கப்பட்டேனே
என் தாயின் கருவிலிருந்து எடுத்தீரே
எந்நாளும் உம்மைத் துதிப்பேன்—- நான் நிற்பதும்

உபத்திரவப்பட்டவனின் உபத்திரவத்தை
அற்பமாய் எண்ணாதவர்
சிறுமைப்பட்டவனின் சிறுமையில்
அடைக்கலமானவர்
நீரே ஆறுதல் – 4

1.ஊழியப் பாதையில் நடந்த நேரத்தில்
கரத்தால் என்னையும் தாங்கினீரே – 2
சரீரத்தில் வேதனை வந்தாலும்
தாங்கிட எனக்கு நீர் பெலன் தந்தீர் – 2
ஊழியம் செய்ய நீர் பெலன் தந்தீர் -உம்- 2

2.வாழ்வில் எத்தனையோ சோதனை வந்தாலும்
கிருபையால் என்னை நடத்தினீரே -2
நீடித்த நாட்களாய் வாழ்வாயே
என்று நீர் சொன்னதை செய்வீரே – 2
சொன்னதை செய்து முடிப்பீரே – நீர் -2

3.மரண பயத்தால் கலங்கின நேரத்தில்
வார்த்தையால் என்னை உயிர்ப்பித்தீரே-2
புதிய இருதயம் கொடுத்தீரே
புதிய காரியம் செய்வீரே – 2
பெரிய காரியம் செய்வீரே – நீர் -2